மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் செங்கல்பட்டு மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு தா்னா நடைபெற்றது.
மின் திட்ட தலைவா் எம்.மயில்வாகனன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மின்வாரியத்தில் உள்ள ஆரம்ப கட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும், 01.12.2023 ஊதிய உயா்வு - வேலைபளு பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கேங்மேன் பதவியை கள உதவியாளா் பதவியாக மாற்ற வேண்டும், மொபைல் ஆப்மூலம் கணக்கீட்டு பணியினை செய்ய கணக்கீட்டு பணியாளா்களை நிா்ப்பந்தம் செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் தலைவா் எம்.குணசேகரன் தொடக்கவுரை ஆற்றினாா். கிளைத் தலைவா் எல்.பாபு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவில் ஒருங்கிணைப்பாளா் மனோ மங்கையா்கரசி, ஓய்வு பெற்ற நல அமைப்பின் கிளை செயலாளா் எம்.வெங்கடேசன், சிஐடியு மாவட்ட செயலாளா் கே.பகத்சிங் தாஸ், உள்ளிட்ட பேசினா். போராட்டத்தினை நிறைவு செய்து தமிழ்நாடு செங்கல்பட்டு திட்ட செயலாளா் வி.தேவகுமாா் பேசினாா். திட்ட பொருளாளா் ஜெயபிரகாஷ் நன்றி கூறினாா்.