உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம்...
அன்னையர் நாளில்.. இதயம் தொடும் பரிசுப் பொருள்கள்!
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த விலை மதிப்புள்ள பரிசுப்பொருள்கள் தயாரிப்பு நிறுவனம் மான்ட்பிளாங்க், வரவிருக்கும் அன்னையர் தினத்திற்காக சில பரிசுப் பொருள்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குகிறது.
நமது வாழ்வை செதுக்கியவர்களுக்கு நாம் அளிக்கும் வெகுசில பரிசுகள் மட்டுமே, நமது இதயத்தில் இருப்பதை மிகத் துல்லியமாக சொல்லும் பொருளாக இருக்கும். இந்த அன்னையர் நாளில், இதயம் தொடும் வாசகங்களை உள்ளடக்கிய பல பரிசுப்பொருள்கள் நமது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
இந்த அன்னையர் தினத்தன்று, மான்ட்பிளாங்க் இதயம் தொடும் வார்த்தைகளின் சக்தியை, விலைமதிப்புள்ள பரிசுப்பொருள்களுடன் இணைத்து வழங்கும் யோசனையைத் தருகிறது.
அன்னையர் நாளில், நீங்கள் உங்களது அளவற்ற அன்பு, நன்றியுணர்வு அல்லது உங்களது பாராட்டுகளை வெளிப்படுத்த விரும்பினால், உங்களது நிகரற்ற தாய்க்கு அளிக்கவிருக்கும் மிகந்த சிறந்த பரிசு மூலமாகத்தான் அதை வெகுசிறப்பாக செய்ய முடியும்.
உங்கள் #HeartWritten வார்த்தைகளை வெளிப்படுத்த உதவும் வகையில், ஒவ்வொரு பரிசுப்பொருளும் ஒரு வெள்ளை மான்ட்பிளாங்க் பரிசுப் பெட்டகத்தில் மிகக் கவனமாக வைக்கப்பட்டு, உங்கள் மனதிலிருக்கும் வார்த்தையை, வாழ்த்துகளை சொல்வதற்கு மிகச் சிறந்த வெள்ளை தாளையும் இணைத்து வருகிறது.
மெய்ஸ்டர்ஸ்டக் தங்கப் பேனா
காலத்தால் அழியாத, எழுதும் அனுபவத்தைக் கொடுக்கும் மெய்ஸ்டர்ஸ்டக் தங்க முலாம் பூசப்பட்ட 149 ஃபவுன்டெயின் பேனாவைப் பரிசாகக் கொடுக்கலாம். இது கைவினைஞர்களால் செய்யப்பட்ட Au 750/18K தங்க நிப், ஒரு பேனா மூடியுடன் ஒரு சிறிய குப்பியில் விலைமதிப்பற்ற கருப்பு பிசினும், பேனா மூடியின்மேல் பதிக்கப்பட்ட வெள்ளை நிற மான்ட்பிளாங்க் சின்னமும் பார்ப்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும்.
மேலும், மிக நேர்த்தியான பார்ப்பவர் மயங்கும் வகையில், ஒரு எழுதுபொருளாக வருகிறது, மான்ட்பிளாங்க் மியூசஸ் மர்லின் மன்றோ சிறப்பு பதிப்பான முத்து ஃபவுன்டெயின் பேனா. போன மூடியுடன் வெள்ளை நிற விலைமதிப்பற்ற பிசினும் இணைந்திருக்கும். இந்த பேனாவுக்கு மூடிதான் ஸ்பெஷல்.. என்னவென்றால், முத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கிளிப் பொருத்தப்பட்டு இந்த பேனா மூடி வடிவமைக்கப்பட்டு பேனாவின் அழகை மேலும் மெருகேற்றுகிறது.
இது மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுக்கான அடையாளமாகவும் இருக்கும்.

மெய்ஸ்டர்ஸ்டக் மெசெஞ்சர்
மெய்ஸ்டர்ஸ்டக் மெசெஞ்சர், மான்ட் பிளாங்க் மலையின் அழகால் ஈர்க்கப்பட்ட நேர்த்தியான மிக மெல்லிய உலோகத்தாலான ஜிப் கொண்டு மூடும் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமா? கருப்பு நிறத்திலான சர்டோரியல் டிரியோ வால்லெட் மற்றும் சாஃப்ட் தின் டிரியோ வால்லெட் போன்றவையும், அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் பயனுள்ளதாகவும் பல வகையான கார்டுகளை வைத்துப் பராமரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கேபின் டிராலி
மென்மையான அதேவேளையில் மிக நேர்த்தியான சிறந்த பயணத்துக்கான சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட வாடாமல்லி நிற #MY4810 கேபின் டிராலி பரிசளிக்க ஏற்றதாக அமைந்துள்ளது.

இதனுடன் மான்ட்பிளாங்க் #MTB 03 இன்-இயர் ஹெட்ஃபோன்ஸ், பரிசுப் பொருளில் இணைந்தால், சொல்லவே வேண்டாம். ஐவெரி நிறத்தில், இரைச்சலே இல்லாமல் தொடுதலின் மூலம் இயங்கும் செயல்பாடுகள், அணிந்துகொள்ள மிக அருமையான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதால் இதனை வழங்கும்போது, உங்கள் மனதுக்குள் இருக்கும் அன்பை நீங்கள் வார்த்தைகளால் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் பொருள்களே சொல்லிவிடும்.
மான்ட்பிளாங்க் வழங்கும் கைக்கடிகாரம்
மான்ட்ப்ளாங்க் போஹேம் ஆட்டோமேட்டிக் டேட் 30மிமீ கைக்கடிகாரம், வெள்ளி நிற டயலில் வைர குறியீடுகளுடன், ரோஸ் கோல்டு மூலம் பூசப்பட்ட மலர் வடிவ அராபிக் எண்ம வடிவங்களுடன் பாதாம் அல்லது கண் வடிவத்தில் உள்ள ஒரு சிறு பகுதியில் காட்டும் தேதியைப் பார்ப்பவர் நிச்சயம் மெய்மறந்துப் போவார்கள்

பூமி சுழலும் போது நட்சத்திரங்களின் இயக்கத்தை அடிப்படையாக வைத்து, இரவுநேரத்தில் வானத்தின் மிக அருமையான புகைப்படங்களால் ஈர்க்கப்பட்டு இந்த கைக்கடிகாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று விவரிக்கப்பட்டுள்ளது.
கைக்கடிகாரம் அலிகேட்டர் பிரிண்ட் பொறித்த, தேவைக்கேற்ப கடிகார டயலுடன் மாற்றக்கூடிய வெள்ளை கன்றுக் குட்டியின் தோல் பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அன்னையர் நாளில், மான்ட்பிளாங்க் பரிசுகளை வழங்கி வாழ்வில் மறக்க முடியாத நாளாகவும், உங்கள் இதயத்தில் இருக்கும் வார்த்தைகளை வடித்து மறக்க முடியாத பரிசாகவும் மாற்றுங்கள்.
- ரனோஜோய் முகர்ஜி