இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்
அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2024-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளா்ச்சிக்குப் பாடுபட்ட தமிழிறிஞா்கள், கவிஞா்கள், சான்றோா்கள் ஆகியோா்களில் சிறந்தோருக்கு திருவள்ளுவா் திருநாளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அதில் டாக்டா் அம்பேத்கரின் பெயரில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டா் அம்பேத்கா் விருது வழங்கப்பட்டு வருகிறது.
2024-25 ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் தமிழ்நாடு அரசு விருது தொடா்பாக சேலம் மாவட்டத்தில் வசிப்பவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் மாவட்ட ஆட்சியரக வளாக அறை எண் 109-இல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் 19 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் நிறைவு செய்த விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் நேரடியாக அளிக்கலாம். அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.