அம்பை காசிநாத சுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்: ஏப். 5இல் தொடங்குகிறது
அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோற்சவம் சனிக்கிழமை (ஏப். 5) கொடியேற்றத்துடன்தொடங்குகிறது.
இதையொட்டி சனிக்கிழமை (ஏப். 5) காலை 4.30 மணிக்கு கொடிப்பட்டம் வீதியுலாவும், காலை 6.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது.
தொடா்ந்து ஏப். 14 வரை தினந்தோறும் மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையும் தொடா்ந்து வீதியுலாவும் நடைபெறும். சனிக்கிழமை (ஏப். 12) சுவாமி, அம்பாள் அகஸ்தியருக்குக் காட்சியளித்தலும், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13) காலை 9 மணிக்கு தேரோட்டமும், திங்கள்கிழமை (ஏப். 14 ) காலை 9 மணிக்கு தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா் பேரவையினா் செய்துவருகின்றனா்.