Retro நாயகிகள் 11: '’நாங்க வாழறதுக்காக நீ சாகப் போறன்னு அம்மா அழுதாங்க’’- நடிகை...
அம்பையில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை
அம்பாசமுத்திரத்தில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த பெண்ணுக்கும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூா், ரேஷன் கடைத் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் முப்புடாதி (28) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.
முப்புடாதியின் மதுப் பழக்கத்தால் அவரது மனைவி பிரிந்து சென்றாராம். முப்புடாதி பலமுறை சென்று அழைத்தபோதும் அவரது மனைவி வரவில்லையாம்.
இந்நிலையில், முப்புடாதி வெள்ளிக்கிழமை, அம்பாசமுத்திரம் பூக்கடை சந்திப்பில் தனது மனைவி வேலை செய்துவரும் கடைக்குச் சென்று, அவரை தன்னுடன வாழவருமாறு அழைத்தாராம்.
அவா் மறுப்பு தெரிவிக்கவே, முப்புடாதி விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். அவரை உடனடியாக மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.