செய்திகள் :

அம்மா சங்கத்துக்கு முதல் பெண் தலைமை - `ஆபாச’ சர்ச்சைகளை கடந்து ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நடிகைகள் வெற்றி

post image

மலையாள சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி கடந்த ஆண்டு சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதைத்தொடர்ந்து மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான `அம்மா' அமைப்பின் தலைவராக இருந்த மோகன் லால் ராஜினாமா செய்ததுடன் நிர்வாகக்குழுவை கூண்டொடு கலைத்தார்.

இந்த நிலையில் அம்மா அமைப்புக்கான நிர்வாகிகள் தேர்தல் ஆகஸ்ட் 15-ல் நடைபெற்றது. இந்தமுறை பெண்கள் அதிகமாக போட்டியிட்டனர். அம்மா அமைப்பின் தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனன், பொதுச்செயலாளர் பதவிக்கு குக்கூ பரமேஸ்வரன், துணைத்தலைவர் பதவிக்கு லட்சுமி பிரியா, இணைச் செயலாளர் பதவிக்கு அன்ஸிபா ஹசன் என பல பதவிகளுக்கு நடிகைகள் போட்டியிட்டனர்.

இதற்கிடையே நடிகை ஸ்வேதா மேனன் ஆபாச காட்சிகளில் நடித்ததாகவும், பணத்துக்காக விளம்பரங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் மார்ட்டின் மேனாச்சேரி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோர்ட் உத்தரவுபடி கொச்சி சென்ட்ரல் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

அம்மா அமைப்பின் புதிய நிர்வாகிகள்

மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பின் தேர்தலில் தலைவர் வேட்பாளராக போட்டியிடுவதால் தனக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் நடிகை ஸ்வேதா மேனன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நடிகை ஸ்வேதா மேனன் மீதான வழக்கில் மேல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் மலையாள சினிமா நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் தேர்தல் நடைபெற்றது. நடிகர் சங்கத்தில் மொத்தம் 506 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தனர். அதில் இன்று 298 பேர் வாக்களித்தனர்.

நடிகை ஸ்வேதா மேனன்

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மா அமைப்பின் 31 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவர் ஆவது இதுதான் முதன்முறை.

பொதுச்செயலாளராக குக்கூ பரமேஸ்வரனும், உண்ணி சிவபால் பொருளாளராகவும், லட்சுமி பிரியா துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்ஷிபா ஹசன் இணைச்செயலாளராக ஏற்கனவே போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டிருந்தார். இதையடுத்து மலையாளா சினிமா நடிகர் சங்க நிர்வாக பதவிகளை நடிகைகள் அலங்கரித்துள்ளனர். இன்னும் மூன்று ஆண்டுகள் இந்த நிர்வாக குழு பதவிவகிக்கும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

உபேந்திரா: `'பாட்ஷா'வை விட 10 மடங்கா?’ - அன்று இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த திரைக்கதை மன்னன்

சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, 90'களில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த கன்னட இயக்குநராக, நடிகராக உச்சத்தில் இருப்பவர் உபேந்திர ராவ்.பி.காம் வரை நன்றாகப் படித்த உபேந்திர, சினிமா மீதா... மேலும் பார்க்க

Nelson: ``அட்வான்ஸ் வாழ்த்துகள்: திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" - வாழ்த்தும் நெல்சன்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ம் ஆண்டு 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' படம் உருவாகி வருகிறது... மேலும் பார்க்க

Coolie: ``உங்களுடன் திரையைப் பகிர்ந்துகொண்டதில் பெருமிதம்" - ரஜினிகாந்த் குறித்து நடிகர் மம்முட்டி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படம் நாளை வெளியாகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களின் ப... மேலும் பார்க்க

Coolie: ``இந்த மகத்தான மைல்கல்லுக்கான ஒரே ஒருவர் ரஜினி மட்டுமே" - வாழ்த்திய நடிகர் மோகன்லால்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படம் நாளை வெளியாகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களின் ப... மேலும் பார்க்க

Rajnikanth 50: ``என்னுடைய முதல் அடி உங்களுடன்தான்" - ரஜினிகாந்த் குறித்து நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப் ஆகியோர் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘வார்’ திரைப்படம், மிகப்பெரிய வெற்றிப்பெற்று, வசூலையும் குவித்தது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘வார் 2’ திரைப்படத்த... மேலும் பார்க்க

Coolie: ``50 ஆண்டுகள்; ஒரே சிம்மாசனம், ஒரே மனிதர்"- வைரலாகும் அனிருத் பதிவு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தில் அமீர் கான், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் எனப் பெரும் ... மேலும் பார்க்க