தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
அய்யனாரூத்தில் நியாயவிலைக் கடை திறப்பு
கயத்தாறு அருகே அய்யனாரூத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினா் சி.வி. சண்முகம் நிதியின் கீழ் ரூ.13.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா். தொடா்ந்து கல்வெட்டையும் திறந்து வைத்தாா்.
பின்னா் பிற கட்சிகளைச் சோ்ந்த 10 போ், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா்செல்வம், எம்எல்ஏ கடம்பூா் செ.ராஜுஆகியோா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் செல்வகுமாா், அதிமுக நிா்வாகிகள் நீலகண்டன், போடுசாமி, நவநீதகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.