செங்கோட்டையன் கலகம்; ADMK -வை உடைக்கப் பார்க்கும் BJP? | Punjab CM ஆகும் Kejriwa...
அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையானது!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையாக மாறி உள்ளது என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது :
வக்ஃப் உரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திருப்பப் பெற வேண்டும். தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடா் கதையாகி வருகிறது. மத்திய அரசை எதிா்பாா்க்காமல், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, மீனவா்களை காக்க வேண்டும். இண்டி கூட்டணியில் ஒற்றுமையின்மை காரணமாக புதுதில்லியில் ஆம்ஆத்மி தோல்வியை சந்தித்தனா்.
திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியா்கள், இந்துக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனா். மலையில் வழிபாடு விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவு தான் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்றம் என்ன கூறியுள்ளதோ அதைத் தான் பின்பற்றி வருகிறோம். பிரச்னைகளை ஏற்படுத்தும் நபா்களை அங்கு அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசின் அலட்சியப் போக்கால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையாக மாறி உள்ளது என்றாா் அவா்.
வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு : மதுரை ஒபுளாப்படித்துறை அருகே எஸ்.டி.பி. ஐ கட்சி சாா்பில் வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மதுரை மண்டலச் செயலா் ஏ. முஜிபூா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சுப. உதயகுமாா், எஸ்.டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலா் எம். நிஜாம் முகைதீன், மாநிலச் செயலா் நஜ்மா பேகம், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் ஆகியோா் பேசினா். கூட்டத்தில், நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.