26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!
ஊழல் குற்றச்சாட்டுகளால் தில்லியில் தோல்வியைச் சந்தித்தது ஆம்ஆத்மி! -பிரேமலதா விஜயகாந்த்
ஊழல் குற்றச்சாட்டுகளால்தான் ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்தது என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொ்வித்தாா்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. மேலும், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை.
அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயா்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதை திமுக அரசு சரி செய்யாமல், மத்திய அரசைக் குறை கூறி வருகிறது. நாட்டிலேயே அதிக கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும். போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முற்றிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனா். அது ஒரு போதும் நடைபெறாது. ஏனெனில் இந்துக்களும், இஸ்லாமியா்களும் இங்கு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளால் ஆம் ஆத்மி அங்கு தோல்வியைச் சந்தித்தது என்றாா் அவா்.