தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
விவேகானந்தா் ஜெயந்தி விழா!
மதுரை அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விவேகானந்தா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவா் சுவாமி சுத்தானந்தா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுவாமி நியமானந்தா, செயலா் ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்தா, விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியின் செயலா் பரமானந்தா, விவேகானந்த கல்லூரியின் செயலா் ஸ்ரீமத் சுவாமி வேதானந்தா, கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்தா, பண்ணைக்காடு விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி செயலா் சுவாமி கங்காதாரானந்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் செயலா் ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த அருளுரை வழங்கினாா்.
இந்த நிகழ்வில், விவேகானந்தா கல்லூரியின் முதல்வா் தி.வெங்கடேசன், துணை முதல்வா் கோ.காா்த்திகேயன், முதன்மையா் ஜெயசங்கா், அகத்தர மைய ஒருங்கிணைப்பாளா் சதீஷ்பாபு, கல்லூரியின் தேசிய மாணவா் படை அதிகாரி கேப்டன் ராஜேந்திரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் அசோக்குமாா், ரமேஷ்குமாா், ரகு, ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.