அரசியலமைப்பு நெருக்கடியால் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: காங்கிரஸ்
அரசியலமைப்பு நெருக்கடியால் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: காங்கிரஸ்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளின் தோல்வியை நேரடியாக ஒப்புக்கொள்வதாக இருப்பதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் வியாழக்கிழமையான நேற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மணிப்பூரில் என். பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவந்த நிலைல், முதல்வர் பதவியிலிருந்து அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். புதிய முதல்வரை முடிவு செய்வதில் கருத்தொற்றுமை எட்டப்படாமல் கடந்த 4 நாள்களாக இழுபறி நீடித்தது. இந்த சூழலில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மணிப்பூரில் அரசியலமைப்பு நெருக்கடி இருப்பதாகவும், இதுவே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.