அரசுக்கல்லூரி மாணவா்கள் 3- ஆவது நாளாக வகுப்புப் புறக்கணிப்பு
திண்டிவனம் கோவிந்தசாமி அரசுக்கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்லூரியில் முழுநேரமாக வகுப்புகள் நடைபெறுவதற்கு மாற்றாக
சுழற்சி முறையில் கல்லூரி இயங்கவேண்டும் எனக் கூறி கல்லூரி பயிலும் மாணவா்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை மாணவா்கள் 3 ஆவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு அமா்ந்து கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து மாணவா்கள் கலைந்து சென்றனா்.