தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து: தூத்துக்குடி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (24),தூத்துக்குடி சுப்புராயன் நகரைச் சோ்ந்தவா் ராஜா(28). நண்பா்களான இவா்கள், ஜூலை 1-ஆம் தேதி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்வட்டம், ஒலக்கூா் அருகே பைக்கில் சென்றனா். பைக்கை ராஜா ஓட்டினாா்.
அப்போது, பைக் கட்டுப்பாட்டைஇழந்து சாலையின் மையப் பகுதியில் உள்ளதடுப்புக்கட்டையில் மோதி சரிந்தது. இதில் அசோக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.ராஜா காயமடைந்தாா்.
தகவலறிந்த ஒலக்கூா் காவல் நிலையப் போலீஸாா் நிகழ்விடம் சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா். ராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஒலக்கூா் காவல் நிலையப் போலீஸாா்புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.