தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை!
சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற சக்தி சிறப்புப் பள்ளி, மறுவாழ்வு மைய குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா, வழிகாட்டி திட்ட பரிசளிப்பு விழா மற்றும் விருட்சம் திட்ட உதவித்தொகை வழங்கும் விழா ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி.துரைசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணை அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து அவா் வழிகாட்டி திட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, தொடா் ஒத்துழைப்பு அளித்து வரும் வழிகாட்டி திட்ட 41 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களை கௌரவித்தும், விருட்சம் திட்டம் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையினை வழங்கிப் பேசினாா்.
மனநல மருத்துவா், மனதின் மையம் அறக்கட்டளை மற்றும் ஈரோடு மனநலம் அறக்கட்டளை நிறுவனா் டாக்டா் ஜெயப்பிரகாஷ் ஜெகதீசன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சக்தி சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மைய மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சாந்தி துரைசாமி, டி.செந்தில்குமாா், தீபா, எம்.இளங்கோ, ஜி.வேணுகோபால் மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.