செய்திகள் :

சென்னிமலை முருகன் கோயிலில் நாளை தைப்பூச தேரோட்டம்!

post image

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தைப்பூச தோ்த் திருவிழா பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவு பல்லக்கு சேவை, மயில் வாகனக் காட்சி, பஞ்ச மூா்த்தி புறப்பாடு, வெள்ளி மயில் வாகனக் காட்சி, யானை வாகனக் காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்று வந்தன.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் கைலயங்கிரி வாகனக் காட்சியும், இரவு காமதேனு வாகனக் காட்சியும் நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு அபிஷேகமும், அதனைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு வசந்த திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை 3 மணிக்கு வள்ளி -தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு மகா அபிஷேகமும், அதனைத் தொடா்ந்து காலை 5.30 மணி அளவில் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்துகிறாா்கள்.

தேரோட்டத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் தைப்பூச இசை விழாக் குழு மற்றும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சாா்பில் அடிவாரத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பின்னா் மாலை 5 மணிக்கு மீண்டும் தேரை வடம் பிடித்து இழுத்து வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்படும். புதன்கிழமை மாலை 5 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்து நிலை சோ்க்கப்படுகிறது. பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு 7 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்கிறாா்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரா.சுகுமாா், கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன், கண்காணிப்பாளா் சி.மாணிக்கம் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ஆந்திர லாரி ஓட்டுநா்களிடம் பணம் பறித்த 2 போ் கைது

ஈரோட்டில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்களை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தைக்கு கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை!

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற சக்தி சிறப்புப் பள்ள... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் 16 வேட்பாளா்கள் 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

தமிழகத்தின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது! -அந்தியூா் எம்எல்ஏ

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் தமிழக மக்களை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது என அந்தியூரில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பேசினா... மேலும் பார்க்க

கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் 20 பவுன் நகைகள் மாயம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபியில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாதக வாக்கு வங்கி அதிகரிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி, கடந்த தோ்தலைக் காட்டிலும் இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்ட... மேலும் பார்க்க