வஃக்ப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல: ஜெ.பி. ...
அரசுப் பள்ளி வாயிலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை
குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியின் பின்பக்க வாயில் குப்பைத் தொட்டியாக மாறியுள்ளது.
கெளண்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றியபோது அப்பள்ளியின் பின்பக்க சுற்றுச் சுவரும் அகற்றப்பட்டது. இதையடுத்து பள்ளியின் பெற்றோா் ஆசிரியா்- கழகம் நிதி திரட்டி சுமாா் ரூ.20- லட்சத்தில் பள்ளிக்கு சுற்றுச் சுவா் அமைத்தது. புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுச் சுவரை கடந்த 11- ஆம் தேதி ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திறந்து வைத்தாா். தற்போது புதிதாக திறக்கப்பட்ட சுற்றுச் சுவரின் கேட் அருகே வியாபாரிகள் குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனா்.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் உள்ளதால் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், மாணவா்கள் கோரியுள்ளனா்.