அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு
பெருந்துறையை அடுத்த, சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் மன்ற நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் விசுவநாதன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சு.காளியப்பன் வரவேற்றாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஆசிரியா் காயத்திரி கடிகாரங்களை பரிசாக வழங்கினாா். எலைட் பள்ளிக்கு தோ்வான மாணவா் லிங்கேஸ்வரனுக்கு வட்டார கல்வி அலுவலா் விசுவநாதன் பரிசு வழங்கி பாராட்டினாா். மேலும் விழாவில், ஜூனியா் ரெட் கிராஸ் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியா் ரங்கநாதன் நன்றி கூறினாா்.