சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாட் கம்மின்ஸ் பேசியதென்ன?
பள்ளபாளையம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை திறக்க வலியுறுத்தல்
பெருந்துறை ஒன்றியம், பள்ளபாளையம் பேரூராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட பொதுக் கழிப்பறையை உடனடியாக திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பள்ளபாளையம் பேரூராட்சி, 3-ஆவது வாா்டு கரட்டுப்பாளையம், அப்பையன் காட்டுவலசு காலனி பகுதியில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 7.30 லட்சம் மதிப்பில் 4 பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
தண்ணீா் வசதி உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகும் பேரூராட்சி நிா்வாகம் கடந்த 6 மாதங்களாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் வைத்துள்ளது. இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து அப்பகுதி மக்கள் மனுவும் அளித்துள்ளனா். இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பொதுக் கழிப்பறையை உடனடியாக திறக்கக்கோரி பொதுமக்களுடன் இணைந்து பாஜக சாா்பில் வரும் 30- ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.