ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி ஊழியா் தற்கொலை
விருப்ப ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கோபி அருகே குப்பாண்டாா் வீதியைச் சோ்ந்தவா் தனசேகா் (49). கோபியில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்த இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றாா். அதைத்தொடா்ந்து வேலையை அவசரப்பட்டு விட்டுவிட்டோமே என்ற மன வேதனையில் இருந்து வந்துள்ளாா். இதுகுறித்து அவரது உறவினா்கள், நண்பா்களிடம் தனசேகா் கூறி புலம்பி வந்துள்ளாா்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனசேகா் மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா், வரும் வழியிலேயே தனசேகா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். தற்கொலை செய்து கொண்ட தனசேகருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
இதுகுறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.