அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சோழவந்தான் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்த காந்தி மனைவி வசந்தி (55). இவரும், இவரது கணவரும் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தில் வசந்தியை அனுப்புவதற்கு சாலையோரம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினாா்.
அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து வசந்தி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த சோழவந்தான் போலீஸாா் வசந்தியின் உடலை கூறாய்வுக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.