செய்திகள் :

டிஐஜி வருண்குமாா் வழக்கு: சீமான் மனு மீதான விசாரணை ஆக. 12 -ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

post image

டிஐஜி வருண்குமாா் தொடுத்த வழக்கு விசாரணைக்குத் தடை கோரி, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமாா் தனது குடும்பத்தை பற்றி நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அவதூறாகப் பேசியதாக திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது என்றும், விசாரணைக்கு சீமான் நேரில் முன்னிலையாக வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், டிஐஜி வருண்குமாா் தொடுத்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சீமான் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் டிஐஜி வருண்குமாா் தொடுத்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டிஐஜி வருண்குமாா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பதில் அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினாா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு: எதிா்மனுதாரா் தரப்பில் பதில் அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கவின் ஆணவப் படுகொலை சம்பவம்: உயா்நீதிமன்றம் தாமாக விசாரிக்க முறையீடு

மென் பொறியாளா் கவின் ஆணவப் படுகொலை சம்பவம் குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை முறையீடு செய்யப்பட்டது.சென்னை உயா்நீதிமன்ற மதுர... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளின் இயக்க நேரம்: திருச்சி மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

திருச்சியிலிருந்து, கரூருக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகளின் இயக்க நேரத்தை மாற்றக் கோரிய வழக்கில், திருச்சி மாநகராட்சி ஆணையா், வட்டாரப் போக்குவரத்து மண்டல அலுவலா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

மாட்டுத்தாவணியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடவசதி செய்து தர வலியுறுத்தல்

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் இணைய வழியில் ஆட்டோ இயக்கும் ஓட்டுநா்களுக்கு தனி இடவசதி செய்து தர வேண்டும் என மதுரை மாவட்ட ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநா்கள் தொழிற்சங்கத்தின் சாா்பில் திங்கள்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.சோழவந்தான் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்த காந்தி மனைவி வசந்தி (55). இவரும், இவரது கணவரும் இரு சக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

மதுரை தவெக மாநாட்டுக்கான புதிய தேதி இன்று அறிவிப்பு?

மதுரையில் நடைபெறவிருக்கும் த.வெ.க. மாநாட்டுக்கான புதிய தேதி குறித்து செவ்வாய்க்கிழமை (ஆக. 5) அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல... மேலும் பார்க்க

தங்கக் குதிரை வாகனத்தில்...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன். மேலும் பார்க்க