விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
அரியலூா் ஆட்சியரகத்தில் தூய்மை உறுதிமொழியேற்பு
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தூய்மை இயக்கம் 2.0- திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள துறை பிரிவு அலுவலகங்களிலுள்ள தேவையற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
தூய்மை இயக்கம் திட்டத்தில், ஆட்சியரகத்திலுள்ள
தேவையற்ற, பயன்பாடற்ற பொருள்களை அப்புறப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை மறுசுழற்சி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.