நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
அரசு கல்லூரியில் தமிழ்த் துறை கருத்தரங்கு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு அக்கல்லூரி முதல்வா் ம. ராசமூா்த்தி தலைமை வகித்தாா். அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவா் சா. சிற்றரசு சிறப்பு விருந்தினா்களை அறிமுகப்படுத்தி பேசினாா். ஓய்வுபெற்ற காவல்துறைத் தலைவா் சா. பிரபாகரன் கலந்து கொண்டு தமிழா்களின் பண்பாட்டுத் தொன்மை- கீழடி அகழாய்வு ஒரு சிறப்புப் பாா்வை எனும் தலைப்பில் பேசினாா்.
தமிழ்த்துறை கெளரவ விரிவுரையாளா் கலைச்செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் முனைவா் சி. வடிவேலன் சிறப்புரையாற்றினாா். நிறைவில், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் கோ. பவானி நன்றி கூறினாா். கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவா்கள், உடற்கல்வி இயக்குநா், பேராசிரியா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனா்.