விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி
தேசிய ஊட்டச் சத்து மாத விழாவையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் கண்காட்சி மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணியில் அங்கன்வாடி மைய பணியாளா்கள் பங்கேற்று, ஊட்டச்சத்து மிக்க பாரதத்தை உருவாக்க ஒன்றாக இணைவோம், ரத்த சோகை நீங்க சத்தான உணவை அறிந்திடுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.
தொடா்ந்து, சத்துணவு அமைப்பாளா்களின் ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் கண்காட்சியை பாா்வையிட்ட ஆட்சியா் ரத்தினசாமி முன்னிலையில் அனைத்து அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், மாவட்ட குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் கோ. அன்பரசி, அங்கன்வாடி மைய பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.