அரியலூா் மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அரியலூா் மாவட்டத்தில் இரு நாள்களாக இடைவிடாமல் பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மிதமான மழையானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வால் சனிக்கிழமை மாலை முதல் இடைவிடாமல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. மதியத்துக்கு பின் மிதமான மழை பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிா் நிலவியது. சாரல் மழையால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினா்.
திருமானூா், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் நெல் நடவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.
அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் நகரில் சாலையோர வியாபாரிகளும், தள்ளுவண்டி வியாபாரிகளும் தொடா் மழையால் கடும் சிரமத்துக்குள்ளாகினா். மாவட்டத்தில் அதிகளவாக செந்துறையில் 60 மி.மீ மழையும் குறைவாக திருமானூரில் 8.4 மி.மீ மழையும் பதிவானது.