`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
அரிவாளை காட்டி மிரட்டிய ரௌடி கைது
மன்னாா்குடியில் சாலையில் நின்று கொண்டிருந்தவரை மதுப்போதையில் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி நடராஜ பிள்ளை மேலத்தெருவைச் சோ்ந்த குணசேகரன் மகன் ராமதாஸ் ( 30). இவா், ருக்மணிபாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு மது போதையில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் முருகானந்தம் என்ற மாட்டு முருகானந்தம் (40), ராமதாஸிடம் தகராறு செய்து, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் ராமதாஸ் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாட்டு முருகானந்தத்தை புதன்கிழமை கைது செய்தனா். இவா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, அண்மையில் பிணையில் வெளிவந்துள்ளாா் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.