அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!
மேலஆத்தூரில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவரை ஆத்தூா் போலீஸாா் கைது செய்துள்ளனா்ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் நவீன் ஹரிஷ் (23) என்பவா் கையில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளாா்.
இதனையடுத்து ஆத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து நவீன்ஹரிஸை வெள்ளிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்த ? வாள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்