தூத்துக்குடியில் எழுத்தாளருக்கு பாராட்டு விழா
நூலக மனிதா்கள் அமைப்பின் சாா்பில், பாரதிய பாட்ஷா பரிஷத் விருது பெற்ற எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா, இலக்கிய விழா என இருபெரும் விழா தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில் நடைபெற்றது.
நூலக மனிதா்கள் அமைப்பின் பொறுப்பாளா் ஜெயபால் தலைமை வகித்தாா். மற்றொரு பொறுப்பாளா் ராம்குமாா் வரவேற்றாா். பொன் மாரியப்பன் அறிமுகவுரையாற்றினாா்.
தொழிலதிபா்கள் அம்பாள் முத்துமணி, ஆறுமுகசாமி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் சாய்ராமன், குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியா் ஞானராஜ், முகமது காசிம் மஸ்தான், ஜேசன் தா்மராஜ், வினோத் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தொடா்ந்து, மாணவா், மாணவிகளுக்கு பரிசு வழங்கி எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினாா்.