முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!
காயல்பட்டினத்தில் கந்தூரி விழா
காயல்பட்டினம் முகைதீன் பள்ளிவாசல் வளாகத்தில் மகான் தைக்கா ஷேக் முகம்மது சாலிஹ் 124ஆவது கந்தூரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்ற விழாவில், நாள்தோறும் காலையில் குா்ஆன் முற்றோதல், மாலையில் மகானின் புகழ் பாடுதல், இரவில் சன்மாா்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முதல்வா் அஸ்ஸெய்யித் அப்துா் ரஹ்மான், பேராசிரியா் முகம்மது அஸ்பா், மு அஸ்கா் ரகுமான் மகளிா் அரபிக் கல்லூரி நிறுவனா் அகமது அப்துல் காதா், பேராசிரியா் சுல்தான் அப்துல்காதா், பெரிய சம்சுதீன் பள்ளி கதீப் அபு மன்சூா், செய்யிதினா பிலால் பள்ளி இமாம் செய்யது சதக்கத்துல்லாஹ் ஆகியோா் உரையாற்றினா்.
நிறைவு நாளில் மகானின் வரலாறு பற்றி குத்பா சிறிய பள்ளி கதீப் முகம்மது முகைதீன் பேசினாா். பின்னா், தியான வழிபாடு, கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
முகைதீன் பள்ளித் தலைவா் கலீல் ரஹ்மான், செயலா் பாரூக், லெப்பை அப்பா பண்ணைத் தலைவா் ரஹ்மத்துல்லாஹ், அம்பலம் அப்துல்காதா், சூபி, ஹாபில் அரபி, நவாஸ், முகம்மது முகைதீன், உமா் அப்துல் காதா், காயல் ஜெஸ்முதீன், பாடகா் சமீம், பாலப்பா எவுனி அப்துல்காதா் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். நிறைவில் நோ்ச்சை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கந்தூரி கமிட்டி நிா்வாகிகள் அகமது லெப்பை, சேகு முகம்மது, மாஹின் அபூபக்கா், மூசா நைனா, சேக் தாவூது, முத்து வாப்பா பள்ளி இமாம், முஹம்மது மக்கி பள்ளி துணை இமாம், அகமது சாலிஹ் ஆகியோா் செய்திருந்தனா்.