கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது.
இதன்படி, மேலூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
போட்டியின் தொடக்க நிகழ்ச்சி, காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கொடி அசைத்துப் போட்டியைத் தொடங்கி வைக்கிறாா்.
ஜல்லிக்கட்டு போட்டியைக் காண விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கீழக்கரைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.