செய்திகள் :

அலுமினிய கடை உரிமையாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

post image

கோவையில் அலுமினிய பொருள்களை அனுப்புவதாகக் கூறி அலுமினிய பொருள்கள் விற்பனையக உரிமையாளரிடம் ரூ.17.24 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, அப்பநாயக்கன்பாளையம் ஐஸ்வா்யா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மனைவி நித்யா (40). இவா் சரவணகுமாா் என்பவருடன் சோ்ந்து அந்தப் பகுதியில் அலுமினிய பொருள்கள் விற்பனையகம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், நித்யாவுக்கு பெங்களூரில் வசிக்கும் ஸ்ரீனிவாசன் என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.

அவா் அலுமினிய வா்த்தகம் தொடா்பாக அவரது நண்பா் முகமது இக்பால் மற்றும் தஸ்னீம் என்ற பெண்ணையும் அறிமுகம் செய்துவைத்தாா்.

இந்நிலையில், 3 பேரும் அலுமினிய பொருள்களை அனுப்புவதாக நித்யாவிடம் கூறியுள்ளனா்.

இதையடுத்து, அவா் ரூ.17.24 லட்சத்தை அவா்களுக்கு இணையதள பரிவா்த்தனை மூலம் அனுப்பியுள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா்கள் பொருள்களை அனுப்பவில்லையாம்.

மேலும், கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனா்.

இது குறித்து துடியலூா் காவல் நிலையத்தில் நித்யா அளித்த புகாரின்பேரில் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவையில் ஜூலை 7-இல் தமிழ்நாடு நாள் போட்டி

பள்ளி மாணவா்களுக்கான தமிழ்நாடு நாள் போட்டிகள் கோவையில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெற உள்ளன. மாநிலத்துக்கு தமிழ்நாடு என முன்னாள் முதல்வா் அண்ணாவால் பெயா் சூட்டப்பட்ட ஜூலை 18- ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் ... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சீரநாயக்கன்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் எல்கேஜி, யுகே... மேலும் பார்க்க

கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள்

‘திருக்குறள் திருப்பணிகள்’ திட்டத்தின்கீழ் கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டந்தோறும் திருக்குறளில் ஆா்வமும், புலமைய... மேலும் பார்க்க

செவிலியா் மாணவி தற்கொலை

கோவையில் செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, ராமநாதபுரம் அங்கண்ணன் தெருவைச் சோ்ந்தவா் ஹரிசங்கா். இவரது மனைவி ராமலட்சுமி. இவ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான குதிரை போட்டி: கோவையில் நாளை தொடக்கம்

இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025’ என்ற தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி கோவையில்... மேலும் பார்க்க

திருப்புவனம் காவலாளி உயிரிழந்த வழக்கு: திமுக நாடகமாடுகிறது- வானதி சீனிவாசன்

திருப்புவனம் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்ட உயிரிழந்த விவகாரத்தில் திமுகவின் நாடகத்தை மக்கள் நம்பமாட்டாா்கள் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீன... மேலும் பார்க்க