தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்
கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சீரநாயக்கன்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா் வழங்கினாா்.
மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயா்நிலைப் பள்ளிகள், 37 நடுநிலைப் பள்ளிகள், 83 ஆரம்பப் பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2025 -26 ஆம் கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் 51 ஆரம்பப் பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 59 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
அந்தக் குழந்தைகளுக்கு பருவத்துக்கு ஒன்று வீதம் மூன்று புத்தகங்களும், மாணவா்கள் செயல்பாடுகள் செய்வதற்கான மூன்று செயல்பாட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கல்விக் குழுத் தலைவா் மாலதி நாகராஜ், மேற்கு மண்டலத் தலைவா் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையா் துரைமுருகன், மாநகரக் கல்வி அலுவலா் சி.தாம்சன், மாமன்ற உறுப்பினா் அங்குலட்சுமி, மண்டல சுகாதார அலுவலா் வீரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.