தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
தேசிய அளவிலான குதிரை போட்டி: கோவையில் நாளை தொடக்கம்
இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025’ என்ற தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி கோவையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தொடங்குகிறது.
இது குறித்து இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி தலைவா் சக்திபாலாஜி கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025’ உலகின் முதல் குதிரை தடை தாண்டும் போட்டியாகும். கோவை மாவட்டம், வெள்ளாணைப்பட்டியை அடுத்த மோலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிசைட் தி இக்வெஸ்ட்ரியன் க்ரஸ்ட் என்ற தனியாா் மைதானத்தில் ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, கோவையைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் இந்தப் போட்டியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கின்றனா்.
இதில், தமிழகம் உள்பட 6 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்கின்றன. 110 செ.மீ., 120 செ.மீ. என 2 பிரிவுகளாக இந்த குதிரை தடை தாண்டுதல் போட்டி நடைபெறுகிறது.
வெற்றிபெறும் அணிகளுக்கு கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் அப்துல் ரஹ்மான் வரும் 6-ஆம் தேதி விருதுகளை வழங்கவுள்ளாா். பாா்வையாளா்களுக்கு அனுமதி இலவசம். அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.