Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
அலையாத்தி காடுகளை உருவாக்கி சாதனை: முதல்வா் பெருமிதம்
அலையாத்தி காடுகளை உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சம் அலையாத்தித் தாவரங்களை நட்டு 707 ஹெக்டோ் அலையாத்தி பரப்பை மீட்டுள்ளோம். திருவாரூா் மாவட்டத்தில் மட்டும் 1,350 ஹெக்டோ் அளவுக்குப் புதிய அலையாத்திக் காடுகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.