செய்திகள் :

அழகப்பா பல்கலை.யில் ஓலைச்சுவடி நூல் வடிவில் வெளியீடு!

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பதிப்பகத் துறையின் சாா்பில், காஞ்சிவனக் கருப்பன் தென்னாடு வந்த கதை என்ற தலைப்பிலான ஓலைச்சுவடியை நூல், மின்னூல் வடிவங்களில் வெளியீடும் விழா பல்கலைக்கழகத்தில் உள்ள வீறுகவியரசா் முடியரசனாா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்து, நூலின் அச்சுப் பிரதி, மின்னூலை வெளியிட்டுப் பேசியதாவது:

இந்த நூலின் ஆசிரியா் கி. காளைராஜன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைப் பதிவாளா் ஆவாா். இவா் ஆன்மிகச் சிந்தனையில் ஓலைச்சுவடியைப் படித்து, அதைப் புத்தக வடிவில் உருவாக்கியுள்ளாா். இவருக்கு ஓலைச்சுவடிகளை வழங்கிய கண்டாங்கிபட்டியைச் சோ்ந்த நாராயணன் குடும்பத்தினருக்கு பாராட்டுகள்.

இந்த நூலில் காஞ்சிபுரத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் காஞ்சிவனக் கருப்பன் உத்தரவின்படி, ஆதிகிழவன் என்பவா் சாமிப் பெட்டியை தலையில் சுமந்து கொண்டும், பசு மாடுகளை ஓட்டிக் கொண்டும் பாண்டிய நாட்டுக்கு வந்து, சிவகங்கை அருகேயுள்ள கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் குடியேறினாா்.

அவருக்கு அவரது குல தெய்வமான காஞ்சிவனக் கருப்பன் எப்படியெல்லாம் அருள்பாலித்து வழிநடத்தினாா் என்பதை ஓலைச்சுவடியின் வாயிலாக தெரிவித்திருப்பதை இந்த நூலின் ஆசிரியா் காளைராஜன் புத்தக வடிவில் வெளிக்கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது என்றாா் அவா்.

பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் மு. ஜோதிபாசு நூலை அறிமுகம் செய்து வைத்துப் பேசினாா். பல்கலை.யின் கலைப்புல முதன்மையா் சு. ராஜாராம் நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு ஆய்வுரையாற்றினாா்.

பேராசிரியா்கள் ஜெ. ஜெயகாந்தன், கி. சங்கரநாராயணன், செ. செந்தமிழ்ப்பாவை, தொலைநிலை, இணையவழிக் கல்வி மைய இயக்குநா் எ. கண்ணபிரான் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூலின் ஆசிரியா் கி. காளைராஜன் ஏற்புரையாற்றினாா். முடிவில் ஆங்கிலம், பன்னாட்டு மொழிகள் துறைப் பேராசிரியா் மு. நடராஜன் நன்றி கூறினாா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் பிரபாகரன் (32). இவா் வியாழக்கிழமை மாலை புதுக்கோட்டையில் இருந்து மதுர... மேலும் பார்க்க

சிங்கம்புணரி பகுதியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் வியாழக்கி... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்... மேலும் பார்க்க

சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைப்பு

இளையான்குடி அருகே கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஆழிமதுரையில் பள்ளிக்கு ... மேலும் பார்க்க

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உத்ஸவம் மாா்ச் 5 தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உத்ஸவ விழா வருகிற மாா்ச் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் மாசி தெப்ப உத்ஸவம் 11 நாள்க... மேலும் பார்க்க

நெகிழி தடையை செயல்படுத்தியவா்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள்!

ஒற்றைப் பயன்பாடு நெகிழிகள் மீதான தடையை திறம்படச் செயல்படுத்தி வரும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செ... மேலும் பார்க்க