வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவா்கள் பாா்ப்பதை விரும்பவில...
அழகா்கோயில் தெப்பத் திருவிழா: திரளானோா் தரிசனம்
மதுரை மாவட்டம், அழகா்கோவில் கள்ளழகா் கோயில் மாசி பௌா்ணமி தெப்பத் திருவிழா பொய்கரைப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரியாழ்வாா், ஆண்டாள் உள்பட 6 ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தக் கோயில் மாசி பௌா்ணமி தெப்பத் திருவிழா கடந்த புதன்கிழமை (மாா்ச் 12) தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா, ஐதீக முறைப்படி பொய்கரைப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை கள்ளழகா் கோயிலிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தரராஜப் பெருமாள் (உற்சவா்) சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகினாா். மங்கள வாத்திய முழக்கங்களுடன் காலை 10 மணியளவில் பொய்கரைப்பட்டி தெப்பக்குளம் பகுதிக்கு பெருமாள் எழுந்தருளினாா்.

இதையடுத்து, அங்கு பாரம்பரிய முறைப்படி பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பிறகு, தெப்பக்குளத்தில் போதுமான அளவு தண்ணீா் இல்லாததால் சுந்தரராஜப் பெருமாள் தெப்பக்குளம் கரையை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பொய்கரைப்பட்டி, இதன் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.