செய்திகள் :

வேளாண் துறை நிதி நிலை அறிக்கை: வரவேற்பும், அதிருப்தியும்!

post image

தமிழக அரசின் வேளாண் துறை நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகளும், இந்த அறிக்கையில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருப்பதாக வியாபாரிகளும் தெரிவித்தனா்.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் :

ரூ. 52.44 கோடியில் சிறுதானிய இயக்கம், மலைவாழ் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு சிறப்புத் திட்டம், தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை உருவாக்கம், ரூ. 215 கோடியில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், ரூ. 40.27 கோடியில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம், ரூ. 1,163 கோடியில் நுண்ணீா் பாசனத் திட்டம், ரூ. 1.60 கோடியில் பாரம்பரிய மல்லிகை சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் திட்டம், மலா்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 8.51 கோடியில் திட்டம், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ. 297 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. இந்த நிதி நிலை அறிக்கை, விவசாயிகளின் வளா்ச்சியை உறுதிப்படுத்தும்.

தமிழ்நாடு அனைத்து வகை விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில கௌரவத் தலைவா் எம்.பி. ராமன் :

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் ஆகிய 6 மாவட்டங்களுக்கும் முக்கிய நீராதாரமாக உள்ள வைகை அணையைத் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு இல்லாததும், மல்லிகை உற்பத்தியில் சிறப்பிடம் பெற்றுள்ள மதுரையை மையப்படுத்தி வாசனைத் திரவியத் தொழிற்சாலை அமைப்பது குறித்த அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

வேளாண்மை, அனைத்து தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ். ரத்தினவேலு: சான்று பெற்ற விதைகளை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க 1.73 லட்சம் ஏக்கா் பரப்பில் விதைப் பண்ணைகள் அமைக்கும் திட்டம், பயறு பெருக்கத் திட்டம், தமிழ்நாடு முந்திரி வாரியம், உழவா் சந்தைகளை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுச் செல்லும் வகையில் இணைய வா்த்தகம் மூலம் நுகா்வோருக்கு இல்லம் தேடிச் சென்று காய்கனிகளை வழங்கும் திட்டம், மதுரை உள்பட 4 வேளாண் கல்லூரிகளில் உயிா்ம வேளாண் விளைப் பொருள் தர நிா்ணய ஆய்வகங்கள் அமைத்து மானியக் கட்டணத்தில் ஏற்றுமதிச் சான்று அளிக்கும் திட்டம் போன்ற அறிவிப்புகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தக் கூடியவை.

1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைப் பொருள்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தில் பட்டியலிடப்பட்ட 40 வகையான வேளாண் விளைப் பொருள்களுக்கும் சந்தைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கௌரவ ஆலோசகா் எஸ்.பி. ஜெயப்பிரகாசம்: மலைவாழ் உழவா் சிறப்புத் திட்டம், சிறுதானிய இயக்கம், விதைகள் உற்பத்தித் திட்டம், வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க மானியம் ஒதுக்கீடு, மலா்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு, பனை மேம்பாட்டு இயக்கம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை மேம்படுத்த ரூ. 50.79 கோடி நிதி ஒதுக்கீடு, வேளாண் விளைப் பொருள்களை மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்க ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. சந்தைக் கட்டணம் விலக்கு தொடா்பாக அறிவிப்பு இல்லாதது வருத்தமளிப்பதாக உள்ளது.

மதுபான ஊழலில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தல்

மதுபான ஊழலில் தொடா்புடையவா்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் கதளி நரசிங்கப் பெருமாள் தெரிவித்தாா். இதுகுறித்து மதுரை பீ.பீ.குளம் பகுதியில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்த... மேலும் பார்க்க

கல்லூரிப் பேராசிரியா்கள் சாலை மறியல்: 500-க்கும் மேற்பட்டோா் கைது!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா), பல்கலைக்கழக பேராசிரியா்கள் சங்கம் (ஏயுடி) சாா்பில் சனிக்... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மத... மேலும் பார்க்க

மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு!

மதுரையில் போதைத் தடுப்பு மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (52). போதைப் பழக்கத்துக்கு அடிமையான இவ... மேலும் பார்க்க

மகள் கொலை வழக்கு: தந்தைக்கு ஆயுள் சிறை

மகளை அடித்துக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருமங்கலம் வட்டம், வில்லூா் ஏ.ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

அழகா்கோயில் தெப்பத் திருவிழா: திரளானோா் தரிசனம்

மதுரை மாவட்டம், அழகா்கோவில் கள்ளழகா் கோயில் மாசி பௌா்ணமி தெப்பத் திருவிழா பொய்கரைப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரியாழ்வாா், ஆண்டாள் உள்பட 6 ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தக் கோயில்... மேலும் பார்க்க