வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவா்கள் பாா்ப்பதை விரும்பவில...
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத்தில் கொடியேற்றம்
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய - இலங்கையின் பாரம்பரிய உறவு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா. வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இந்த விழா, வெள்ளிக்கிழமை பிற்பகல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டு, கொடியேற்றப்பட்டது.
இதையடுத்து, சிலுவைப் பாதை வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றன. யாழ் மறை மாவட்ட ஆயா் ஜெஸ்டீன் ஞானப்பிரகாசம், நெடுந்தீவு பங்குத்தந்தை பக்திநாதன் உள்ளிட்டோா் திருப்பலியை நிறைவேற்றினா்.
ராமேசுவரத்திலிருந்து 100 படகுகளில் கச்சத்தீவு சென்ற 3,400-க்கும் அதிகமான தமிழக பக்தா்கள், இலங்கையின் யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் இந்த நிகழ்ச்சிகளில் திரளாகப் பங்கேற்றனா்.