புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உ...
அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு
தக்கலை அருகே அழுகிய நிலையில் கிடந்த கட்டடத் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
தக்கலை அருகே ஈத்தவிளை பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி துரைராஜ் (30). இவா் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜேசு சவுந்தா்யா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு 2 மகன்கள், மகள் உள்ளனா்.
துரைராஜ் குடும்பத்துடன் முட்டைக்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். ஜேசு சவுந்தா்யா தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த 6ஆம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டதால், ஜேசு சவுந்தா்யா தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், குழந்தைகளின் பாடப் புத்தங்களை எடுப்பதற்காக அவா் திங்கள்கிழமை வந்தபோது, வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்து அவா் தெரிவித்த தகவலின்பேரில், கொற்றிகோடு போலீஸாா் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, துரைராஜ் தூக்கில் அழுகிய நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.