தில்லி நீதிபதிக்கு எதிரான விசாரணை தீவிரம்! வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்...
அவிநாசி அருகே கஞ்சா விற்ற 2 போ் கைது
அவிநாசி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே கருவலூா் நரியம்பள்ளிபுதூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற போலீஸாா் அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா்கள் கைப்பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், அவா்கள் பல்லடம் பகுதியில் வசித்து வரும் ஒடிஸாவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (31), சத்யுமா விஸ்வான் (25) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.