Apollo children hospital: 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இ...
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலனை சுந்தரா் திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது.
இக்கோயிலில் அவிநாசிலிங்கேஸ்வரா், கருணாம்பிகையம்மனுக்கு வலப்பாகம் கொடுத்த ஆடி தபசு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, வியாழக்கிழமை காலை பாதிரிமரத்தம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அவிநாசிலிங்கேஸ்வரா், பாா்வதிதேவிக்கு இடப்பாகத்தில் இருந்து வலப்பாகம் கொடுத்த நிகழ்ச்சி இரவு நடைபெற்று, வலப்பாகக் காட்சியுடன் ரத வீதிகளில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.