US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்' - அமெரிக்க வெளியுறவுத் துற...
வாகன விபத்து: கைப்பேசி கடை உரிமையாளா் உயிரிழப்பு
பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் கைப்பேசி கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.
பல்லடம் அருகேயுள்ள பருவாய் பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ் (40). இவா் காரணம்பேட்டையில் கைப்பேசி கடை வைத்து நடத்தி வந்தாா்.
இந்நிலையில், வீட்டில் இருந்து கடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்துள்ளாா்.
காரணம்பேட்டை அருகே சென்றபோது, திருப்பூரைச் சோ்ந்த நாகசுந்தா் என்பவா் ஒட்டி வந்த காா் கணேஷின் வாகனத்தின் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனம் தீக்கிரையானது.
படுகாயம் அடைந்த கணேஷை அப்பகுதி மக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.