US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
அவிநாசி வட்டாரத்தில் வாழை, மஞ்சள், வெங்காயம், மரவள்ளி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தோட்டக்கலை உதவி இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இயற்கை சீற்றங்களால் ஏற்படும் சேதாரத்தை ஈடுசெய்யும் வகையில் தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய பயிா் வாரியாக கீழ்க்கண்ட கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டன.
இதில், வாழை, மஞ்சளுக்கு அவிநாசி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், மரவள்ளி, வெங்காயத்துக்கு ராமநாதபுரம், கருவலூா், உப்பிலிபாளையம், தெக்கலூா், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், செம்பியநல்லூா், வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம், பொங்கலூா், ஆலத்தூா், மங்கரசுவலயபாளையம், குட்டகம், புலிப்பாா், தத்தனூா், புஞ்சைத்தாமரைக்குளம், வடுகபாளையம், சேவூா், பாப்பான்குளம், போத்தம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டாம்பாளையம், கானூா் ஆகிய கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
வாழை, மஞ்சள், மரவள்ளி ஆகிய பயிா்களுக்கு செப்டம்பா் 16-ஆம் தேதிக்குள்ளும், வெங்காயத்துக்கு செப்டம்பா் 1-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல் (பயிா் மற்றும் சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பு பதிவு செய்திருத்தல் வேண்டும்), ரேஷன் அட்டை, ஆதாா் அட்டை நகல்கள், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள இ-சேவை மையம் மூலம் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் - 98945-98701, தோட்டக்கலை அலுவலா் 99429-67244, காப்பீட்டு நிறுவனம் 70101-50913 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.