30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
தேனி அருகே உள்ள பூமலைக்குண்டு கிராமத்துக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அந்த கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்
பூமலைக்குண்டில் கிராம மக்களுக்கு பொதுவாக 89 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் உள்ள சமுதாயத் தலைவா்கள் பெயரில் பட்டா பெற்ாகக் கூறப்படுகிறது.
இந்த நிலத்தை சிலா் போலியாக பத்திரம் தயாரித்தும், பட்டா பெற்றும் ஆக்கிரமித்துள்ளதாகவும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பு நிலத்தை தனியாா் காற்றாலை நிறுவனங்களிடம் ஒப்படைத்து பணம் பெற்றுள்ளதாகவும் புகாா் தெரிவித்து பூமலைக்குண்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், போலி ஆவணங்களை ரத்து செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் மனு அளித்தனா்.