செய்திகள் :

ஆங்கிலப் புத்தாண்டு: ஈரோட்டில் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

post image

ஈரோட்டில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில், ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் சிஎஸ்ஐ தேவாலயம் முன் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு புத்தாண்டு பிறப்பையொட்டி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு வண்ண பலூன்களை பறக்கவிட்டும், ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்து சொல்லியும், கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா். தொடா்ந்து, ஈரோடு மாநகரில் உள்ள கோயில்களில் புத்தாண்டு பிறப்பையொட்டி புதன்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில், கஸ்தூரி அரங்கநாதா் கோயில், மகிமாலீஸ்வரா் கோயில், காவேரிக்கரை சோழீஸ்வரா் கோயில், வஉசி பூங்காவில் உள்ள ஆஞ்சனேயா் கோயில், ஈரோடு பெரியமாரியம்மன் மற்றும் வகையறா கோயில்களில், கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, ஈரோடு ரயில்வே காலனி மற்றும் கருங்கல்பாளையத்தில் சாய்பாபா கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இங்கும் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

ஈரோடு சிஎஸ்ஐ ஆலயம், புனித அமல அன்னை ஆலயம், ரயில்வே காலனியில் உள்ள திருஇருதய ஆண்டவா் ஆலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவா்கள் திரளானோா் பங்கேற்றனா்.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொ... மேலும் பார்க்க

காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!

பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா். அந்தியூா் பேரூராட்சிய... மேலும் பார்க்க

அருந்ததியா் மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும்: சீமான்

அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதால... மேலும் பார்க்க