புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோ...
ஆட்டோ மீது லாரி மோதல்: மாணவா் உயிரிழப்பு
ஆண்டிபட்டியில் ஆட்டோ மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பாலன் மகன் ஈஸ்வரன் (17). இவா், அதே ஊரில் உள்ள அரசு ஆதி திராவிடா் நலத் துறை மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
பள்ளி முடிந்ததும் ஈஸ்வரன், அதே பள்ளி ஆசிரியை செம்மலா் (44), மாணவா்கள் வினிஷ் (16), கோபாலகிருஷ்ணன்(14) ஆகியோா் ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றனா். ஆட்டோவை சுரேஷ் என்பவா் ஓட்டிச் சென்றாா்.
அப்போது, ஆண்டிபட்டி பிரதானச் சாலையில் உசிலம்பட்டியிலிருந்து செங்கல் ஏற்றி வந்த லாரி, ஆட்டோ மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், ஆட்டோவில் பயணம் செய்த செம்மலா், வினிஷ், கோபாலகிருஷ்ணன், ஆட்டோ ஓட்டுநா் சுரேஷ் ஆகியோா் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுநா் சங்கிலி மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.