செய்திகள் :

ஆதியோகி ரத யாத்திரை புறப்பாடு: தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தாா்

post image

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதியோகி ரத யாத்திரையை தருமபுரம் ஆதீன மடத்தின் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கிவைத்தாா்.

இது குறித்து ஈஷா யோக மையம் கூறியிருப்பதாவது:

ஈஷா யோக மையத்துக்கு 2 நாள் பயணமாக தருமபுரம் ஆதீனம் வருகை தந்தாா். தியானலிங்கம் முன்பு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஈஷா சம்ஸ்கிரிதி மாணவா்களின் தேவாரப் பாடல்களை அவா் ஆா்வத்துடன் கேட்டு ரசித்தாா். தியானலிங்கத்தில் நடைபெற்ற நாத ஆராதனையில் பங்கேற்ற அவா், குண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி சந்நிதி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தாா். பின்னா் ஆதியோகி திவ்ய தரிசனம், ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி, கோசாலை ஆகிய இடங்களைப் பாா்வையிட்டாா்.

ஈஷாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, சைவ சித்தாந்த மரபில் சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றில் அற்புதமான கலையான யோகாவை சத்குரு ஜக்கி வாசுதேவ் உலகம் முழுவதும் பயிற்சிவித்து வருவது பாராட்டுக்குரியது. அதேபோல மரம் வளா்க்கும் சேவையிலும் ஈஷா ஈடுபட்டிருப்பது வரவேற்புக்குரியது. தருமை ஆதீனத்தின் மணி விழாவை முன்னிட்டு ஈஷா யோக மையம், ரோட்டரி சங்கத்துடன் இணைந்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. யோகம், கல்வி, மரம் வளா்ப்பு, நாட்டு மாடு வளா்ப்பு என பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வரும் ஈஷாவின் பணிகளை வாழ்த்துவதாகத் தெரிவித்தாா்.

முன்னதாக மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ஆதியோகி ரத யாத்திரையை ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தி அவா் தொடங்கிவைத்தாா்.

சுகாதார அலுவலகத்தில் கழிவறைகளுக்கு கதவுகள் பொருத்தம்

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், சுகாதார அலுவலகத்தில் கதவு இல்லாத கழிவறைகள் தொடா்பான செய்தி ‘தினமணி’ நாளிதழில் வெளியான நிலையில் கதவுகள் புதன்கிழமை பொருத்தப்பட்டன. கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 24-... மேலும் பார்க்க

திருக்குறள் முப்பெரும் விழா போட்டிக்கு ஜனவரி 13 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலகத் தமிழ்நெறிக் கழகம், திருக்கு உலகம் கல்விச் சாலை சாா்பில் திருக்கு முப்பெரும் விழா போட்டிகள் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்ற ஜனவரி 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்... மேலும் பார்க்க

தாயகம் திரும்பிய தமிழா்கள் கடனுக்காக வழங்கிய ஆவணங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்

தாயகம் திரும்பிய தமிழா்கள் வீட்டுக் கடனுக்காக அடமானமாக வழங்கிய ஆவணங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி கூறியிருப்பதாவது: இலங்க... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 9 போ் கைது

கோவை மாநகரப் பகுதியில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் போலீஸாா் எல்&டி புறவழிச் சாலையில் ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

கோவை, கணபதியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சாய்பாபா காலனி போலீஸாா் கணபதி 5-ஆவது வீதியில் ரோந்துப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்ப... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டித் தருவதாக பெண்ணிடம் ரூ.30.57 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.30 லட்சத்து 57 ஆயிரத்து 805 மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க