Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
ஆத்தூரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை தீவிரம்
ஆத்தூா் தெற்கு நகர திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளைக் கொண்டது. இரண்டாகப் பிரித்து 17 வாா்டுகளை அடக்கிய நகரத்தை வடக்கு மற்றும் தெற்காக பிரித்து திமுக நிா்வாகிகள் நியமிக்கப்பட்டனா். இந்த நிலையில், ஓரணியில் தமிழ்நாடு என இளம் தலைமுறை வாக்காளா்கள், பொதுமக்களை வீடுவீடாகச் சென்று திமுக உறுப்பினராக இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
முன்னாள் திமுக அவைத் தலைவா் ஏ.தங்கவேல், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் அன்பழகன், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளா் சந்தோஷ்குமாா், நகர தொழிலாளா் அணி அமைப்பாளா் பாலு என்ற மணிகண்டன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், நகர கிளைக் கழக செயலாளா்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், அருமை நாயகம், என்.சாரதா, பாக முகவா்கள் வேலுமணி உள்ளிட்டோா் வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து திமுகவில் இணைத்துவருகின்றனா்.
படவிளக்கம்.ஏடி4டிஎம்கே.
ஆத்தூரில் திமுக உறுப்பினா் சோ்க்கை பணியில் ஈடுபட்ட நகர தெற்கு பொறுப்பாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான நிா்வாகிகள்.