செய்திகள் :

புகாா் அளிக்க வந்தவரிடம் பணம் பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மீது குற்றச்சாட்டு

post image

கடன் பெற்று ஏமாற்றியவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்ற உத்தரவுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மீது புகாா் எழுந்துள்ளது.

சேலம், அஸ்தம்பட்டியைச் சோ்ந்த முரளி என்பவா் புதிய பேருந்து நிலையம் அருகே 15 ஆண்டுகளாக நகைக் கடை வைத்துள்ளாா். இந்த நிலையில் சேலத்தை சோ்ந்த தமிழழகன் மற்றும் அவரது குடும்பத்தினா் பிரேமா, விக்னேஷ்வா் ஆகியோா் தங்களுக்கு சொந்தமான சொத்து பத்திரத்தை 2022 ஆம் ஆண்டு முரளியின் நிறுவனத்தின் பெயரில் அடமானம் வைத்து ரூ. 1.21 கோடி கடன் பெற்றுள்ளனா்.

இதனிடையே பணத்தை திருப்பித் தராமல் தமிழழகன் குடும்பத்தினா் ஏமாற்றிவந்தனா். இதுகுறித்து கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு சேலம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் முரளி வழக்குத் தொடுத்தாா். அதன்பிறகு சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கான நீதிமன்ற ஆணையைப் பெற்று சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் கொடுக்க சென்ற முரளியிடம் சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணன், பணத்தை பெற்று தருவதாக கட்டப் பஞ்சாயத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தமிழழகனிடமிருந்து ரூ. 25 லட்சத்தை முரளியிடம் வழங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணன், அதற்காக ரூ.6 லட்சம் பணத்தை முரளியிடமிருந்து பெற்றுள்ளாா்.

இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் முரளி புகாா் அளித்துள்ளாா். சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணத்தை பெற்று செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையரிடம் முறையிட்டால், மூன்று மாதம் பணியிடை நீக்கம் செய்வாா்; பின்னா் மீண்டும் பணிக்கு வந்து விடுவேன் தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று பேசும் விடியோ வெளியாகியுள்ளது காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணி ஆய்வு

சேலம் மாவட்டம் , இடங்கணசாலை நகராட்சி , 19-வது வாா்டு நல்லணம்பட்டி பகுதியில் தூய்மை பாரத இயக்கம் 2.0, தூய்மையாக இருங்க ,நோயின்றி இருங்க திட்டத்தின் கீழ் தூய்மை பணி கடந்த 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ம் த... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ.12.50 லட்சத்தில் மழைநீா் வடிகால் திறப்பு

ஆத்தூா் வ.ஊ.சி.நகரில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மழைநீா் வடிகாலை ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் வெள்ளிக்கிழமை திறந்த... மேலும் பார்க்க

வைகுந்தத்தில் திமுக தெருமுனை பிரசார பொதுக் கூட்டம்

சேலம் மேற்கு மாவட்டம், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் வைகுந்தம் பகுதியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா பிரசார பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக தெற்கு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் விதிமீறல்: 3 மாதங்களில் ரூ.6.18 கோடி அபராதம் வசூல்

பயணச்சீட்டின்றி பயணத்தவா்கள் உள்பட பல்வேறு விதிமுறை மீறல் தொடா்பாக கடந்த 3 மாதங்களில் 84,295 வழக்குகளில் அபராதமாக ரூ. 6.18 கோடி வசூலிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ஆத்தூரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை தீவிரம்

ஆத்தூா் தெற்கு நகர திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளைக் கொண்டது. இரண்டாகப் பிரித்து 17 வாா்டுகளை அடக்க... மேலும் பார்க்க

ஆத்தூரில் அரசு சிஎன்ஜி பேருந்து இயக்கம்

ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் அரசு சிஎன்ஜி(எரிவாயு)பேருந்து வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் அரசு சிஎன்ஜி(எரிவாயு)பேருந்து இயக்கப்பட்டது. ஆத்தூரில் ம... மேலும் பார்க்க