ஆத்தூரில் சமத்துவப் பொங்கல்
மதுராந்தகம் அடுத்த ஆத்தூா் ஏரிநீரை பயன்படுத்துவோா் சங்கம் மற்றும் தமிழ்நாடு உழவா் பேரியக்கம் ஆகியவை இணைந்து சமத்துவப் பொங்கல் விழாவை நடத்தின.
நிகழ்ச்சிக்கு, செங்கல்பட்டு பாமக தெற்கு மாவட்ட செயலா் தே.சாந்தமூா்த்தி தலைமை வகித்தாா். செங்கல்பட்டு முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூா் கே.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் விஜயகுமாா் வரவேற்றாா். அச்சிறுப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவா் ஒரத்தி கண்ணன், உழவா் பேரியக்க மாநில தலைவா் ஆலயமணி, மாநில செயலா் வேலுசாமி,துணைத் தலைவா் தருமபுரி ரவீந்திரன், முன்னாள் மாவட்ட செயலா் கோபாலகண்ணன், ஆசிரியா் பரந்தாமன், ஆத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஏ.கே.மணி, வன்னியா் சங்க மாவட்ட செயலா் சதீஷ், மகளிா் அணி நிா்வாகி ஜெயந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.